நிலக்கரி கப்பல்களுக்கு தாமத கட்டணங்கள் விதிக்கப்படவில்லை

2 Min Read

நிலக்கரி ஏற்றிவந்த கப்பல்களுக்கு தாமதக் கட்டணங்கள் எதுவும் விதிக்கப்படவில்லை என எரிசக்தி அமைச்சரும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சருமான அனுர கருணாதிலக்க தெரிவித்தார்.

நிலக்கரி இறக்குமதி தொடர்பாக சில தரப்பினர் தவறான தகவல்களைப் முன்னெடுத்துவருகின்றனர். இறக்குமதி செயல்முறையால் இலங்கை நிலக்கரி நிறுவனத்திற்கோ அல்லது மின்சார நுகர்வோருக்கோ எந்தவொரு கூடுதல் செலவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார்.

நிலக்கரி இறக்கும் செயல்முறை மற்றும் கப்பல் தாமதக் கட்டணங்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் தவறான தகவல்கள் குறித்து, நேற்று (19) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலே, அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.. டெண்டர் நடைமுறையின்படி கப்பல்கள் வந்து சேருவதற்கான காலக்கெடு குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர், இந்த ஆண்டு பிரதான டெண்டர் நடைமுறை மற்றும் அவசரகால கொள்முதல்களின் கீழான பல கப்பல்கள் பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட திகதிகளில் நாட்டிற்கு வந்து சேரவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

15ஆவது கப்பல் மார்ச் 03ஆம் திகதி வர ஏற்பாடாகியிருந்தது ஆனால் ஏப்ரல் 08 ஆம் திகதியே வந்தது.இதேபோன்று,மார்ச் 08 ஆம் திகதி வந்தடையவிருந்த 16 ஆவது கப்பல் நான்கு நாட்கள் தாமதமாகி ஏப்ரல் 12 ஆம் திகதியே வந்திருந்தது. 17 ஆவது கப்பல் மார்ச் 13ஆம் திகதி வருவதற்கான ஏற்பாடுகளிருந்தும் ஏப்ரல் 29 ஆம் திகதியே நாட்டை வந்தடைந்தது.மேலும் மார்ச் 18 ஆம் திகதி வரவேண்டியிருந்த 18 ஆவது கப்பல்,ஏப்ரல் 18 ஆம் திகதியன்றே நாட்டுக்கு வந்தது.19 ஆவது கப்பல் மார்ச் 29ஆம் திகதி வர ஏற்பாடனபோதும் மே 02ஆம் திகதியே வந்தடைந்ததையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.அவசரக் கொள்முதலின் கீழான முதல் கப்பல் ஏப்ரல் 20ஆம் திகதி வருமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 26ஆம் திகதியே இக்கப்பல் நாட்டை வந்தடைந்ததாகவும் அவர் கூறினார்.இந்தக் கப்பல்கள் அனைத்திலும் தற்போது நிலக்கரி இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.பருவமழை காலத்தில் கடல் கொந்தளிப்பாக இருப்பதால், நிலக்கரி இறக்கும் பணிகள் செப்டம்பர் மாதம் வரை தாமதமாகலாம். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *