சம்பியனானது சோபர்

1 Min Read

சம்மாந்துறை ரியல் நஜா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘ரியல் நஜா மெகா நைட் 2026’ கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டு கழகம் சம்பியனாகியது.

இச்சுற்றுத் தொடரின் இறுதிப் போட்டி சம்மாந்துறை சென்நெல் சாஹிரா மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (01) நடைபெற்றது. இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய சோபர் அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 5 ஓவர் நிறைவில் 101 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய சம்மாந்துறை ரீபிள் ஜீ அணி 21 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 80 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

சோபர் அணியின் அதிரடி வீரர் சாஜித் இறுதிப் போட்டியின் சிறந்த துடுப்பாட்ட வீரராகவும், சுற்றுத் தொடரின் சிறந்த வீரராகவும் தெரிவு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற சோபர் அணிக்கு வெற்றி கிண்ணத்துடன் ஓர் இலட்சம் ரூபாய் பரிசும் இரண்டாமிடம் பெற்ற ரீபிள் ஜீ அணிக்கு கிண்ணத்துடன் 50 ஆயிரம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *