மும்பையை வீழ்த்தியது சென்னை சுப்பர் கிங்ஸ்

1 Min Read

இம்முறை ஐபிஎல் இல் சோபிக்கத் தவறிவரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டது.

மும்பை தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியை சந்தித்த நிலையில் 9 ஆவது இடத்தில் நீடிப்பதோடு ஆரம்பச் சுற்றுடன் வெளியேறும் நெருக்கடியை அதிகரித்துக் கொண்டுள்ளது.

சென்னை, சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் (02) நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஹார்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி 20 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுகளை இழந்து 159 ஓட்டங்களையே பெற்றது. நாமன் திர் 37 பந்துகளில் 57 ஓட்டங்களைப் பெற்றார். எனினும் வேகப்பந்து வீச்சாளர் அன்சுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பைக்கு நெருக்கடி கொடுத்தது.

இதேவேளை பதிலெடுத்தாட வந்த சென்னை அணிக்கு அதன் தலைவர் ருதுராஜ் கைக்வாட் (67) மற்றும் கார்திக் ஷர்மா (54) இருவரும் 3 ஆவது விக்கெட்டுக்கு பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 98 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டு சென்னையை வெற்றிவரை அழைத்துச் சென்றனர். இதன்மூலம் சென்னை 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 160 ஓட்டங்களை எட்டியது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *