இந்தியாவில் ரூ.55 லட்சத்தில் அறிமுகமான Mercedes-Benz CLA எலக்ட்ரிக் கார்

1 Min Read

மெர்சிடீஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனம் இந்தியாவில் தனது புதிய CLA எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.

CLA, CLA 250+ மற்றும் CLA 250+ Launch Edition என மூன்று மாடல்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த மின்சார கார், ஆரம்ப விலையாக ரூ.55 லட்சம் (ex-showroom) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

CLA எலக்ட்ரிக், Mercedes-Benz Modular Architecture (MMA) அடிப்படையில் உருவாக்கப்பட்டு, 800-வோல்ட் எலக்ட்ரிக் அமைப்பை பயன்படுத்துகிறது.

CLA 200 மாடலில் 58 kWh பேட்டரி வழங்கப்பட்டு, WLTP தரத்தில் 542 கிமீ வரை பயணிக்க முடியும். 221 BHP சக்தியுடன் 0-100 கிமீ வேகத்தை 7.5 விநாடிகளில் அடையும் திறனை கொண்டுள்ளது.

Mercedes CLA Electric India, CLA EV price Rs 55 lakh, Mercedes-Benz electric car launch, CLA 250+ range 792 km, Mercedes Superscreen features, Fast charging 320 kW EV, Luxury electric cars India #MercedesCLA #ElectricCar #IndiaLaunch #LuxuryEV #MercedesBenz #EVIndia #Superscreen

CLA 250+ மாடலில் 85 kWh பேட்டரி வழங்கப்பட்டு, அதிகபட்சமாக 792 கிமீ வரை பயணிக்க முடியும். 268 BHP சக்தியுடன் 0-100 கிமீ வேகத்தை 6.7 விநாடிகளில் அடைகிறது.

இதன் கூடுதல் சிறப்பம்சமாக, 320 kW பாஸ்ட் சார்ஜிங் வசதி மூலம் 10 நிமிடங்களில் சார்ஜ் செய்து 325 கிமீ வரை பயணிக்க முடியும்.

Mercedes CLA Electric India, CLA EV price Rs 55 lakh, Mercedes-Benz electric car launch, CLA 250+ range 792 km, Mercedes Superscreen features, Fast charging 320 kW EV, Luxury electric cars India #MercedesCLA #ElectricCar #IndiaLaunch #LuxuryEV #MercedesBenz #EVIndia #Superscreen

வெளிப்புற வடிவமைப்பில், LED லைட் பார், நட்சத்திர வடிவ ஹெட்லைட்கள், 142 ஒளிரும் மெர்சிடீஸ் லோகோ, 17 முதல் 19 அங்குல அலாய் வீல்கள் போன்ற அம்சங்கள் உள்ளன.

Launch Edition-ல் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ருமென்ட் கிளஸ்டர் மற்றும் 14.6 இன்ச் டச் ஸ்கிரீன் கொண்ட Superscreen அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

உட்புறத்தில், பனோரமிக் சன்ரூஃப், மசாஜ் வசதி கொண்ட பவர் சீட்கள், Burmester சவுண்ட் சிஸ்டம், 360-டிகிரி கமெரா, Level 2 ADAS போன்ற நவீன அம்சங்கள் உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *