அரசு ஊழியர்களுக்கு மாதம் இருமுறை ஊதியம் – தெற்காசிய நாடொன்றில் அறிமுகம்

1 Min Read

அரசு ஊழியர்களுக்கு மாதம் இருமுறை ஊதியம் வழங்கும் திட்டத்தை நேபாளம் அறிவித்துள்ளது.

மாதம் இருமுறை ஊதியம்

நேபாளத்தில் கடந்த ஆண்டு Gen-Z இளைஞர்கள் நடத்திய போராட்டத்தால் ஆட்சி கவிழ்ந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் பாலேன் ஷா நேபாள பிரதமராக பதவியேற்றார்.

அரசு ஊழியர்களுக்கு மாதம் இருமுறை ஊதியம் - தெற்காசிய நாடொன்றில் அறிமுகம் | Nepal Govt Introduce Monthly Twice Salary

பிரதமராக பதவியேற்ற மறுநாளே Gen-Z இளைஞர்கள் போராட்டத்தை கடுமையாக ஒடுக்கிய குற்றச்சாட்டில் நேபாள முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியை கைது செய்து அதிரடி காட்டினார்.

இந்நிலையில், நேபாளத்தில் அரசு ஊழியர்களுக்கு மாதம் இருமுறை ஊதியம் வழங்கப்படும் என்ற நடைமுறையை அறிவித்துள்ளார்.

புதிய விதியின்படி, ஊழியர்களின் தற்போதைய மாதச் சம்பளம் 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, 15 நாட்களுக்கு ஒருமுறை மாதத்திற்கு இருமுறை வழங்கப்படும்.

அரசு ஊழியர்களுக்கு மாதம் இருமுறை ஊதியம் - தெற்காசிய நாடொன்றில் அறிமுகம் | Nepal Govt Introduce Monthly Twice Salary

இதன் மூலம், ஊழியர்களின் நிதிச்சுமையை குறைத்து நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் அரசு இந்த முடிவை எடுத்தாக கூறப்படுகிறது.

மேலும், மாதக்கடைசியில் ஊழியர்கள் நிதிநெருக்கடியை சந்தித்து, கடன் வாங்கும் சூழலை தவிர்க்க உதவுகிறது.

அமெரிக்கா போன்ற சில நாடுகளில் இந்த நடைமுறை உள்ள நிலையில், இந்த மாதம் இருமுறை சம்பள முறையை அமுல்படுத்தும் முதல் தெற்காசிய நாடு என்ற பெருமையை நேபாளம் பெற்றுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *