பல்கேரிய பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அமோக வெற்றி

1 Min Read

ரஷ்ய ஆதரவு கொள்கை கொண்ட பல்கேரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரூமென் ரதேவ், பல்கேரிய பாராளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ளார். திங்களன்று வெளியான அதிகாரப்பூர்வ முடிவுகளின்படி இந்த வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வெற்றியின் ஊடாக பல்கேரியாவில் நீண்டகாலம் ஆதிக்கம் செலுத்தி வந்த அரசியல் சக்திகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த வெற்றியின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்திலும் நேட்டோவிலும் அங்கம் வகிக்கும் பல்கேரியா மீண்டும் ரஷ்யாவுடன் நெருக்கமான உறவைப் பேணவழிவகை செய்யும் என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துக் கணிப்புகளை விஞ்சிய இவ்வெற்றி, ஒரு தலைமுறையில் ஒரு கட்சிக்குக் கிடைத்த மிக வலிமையான முடிவுகளில் ஒன்றாகும். அடுத்துவரும் ஐந்து ஆண்டுகளில் எட்டு தேர்தல்களில் தற்போதைய முடிவே எட்டப்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

97.52 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட பின்னர், ரதேவின் முற்போக்கு பல்கேரியா கட்சி 44.7 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது. இது அக்கட்சி தனித்து ஆட்சி அமைக்கக்கூடும் என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், அவர் ஐரோப்பிய ஆதரவுக் குழுவுடனோ அல்லது ஒரு சிறிய கட்சியுடனோ கூட்டணி அமைப்பதை நிராகரிக்கவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *