ஹைட்டி வரலாற்று கோட்டையில் கூட்டநெரிசல்: 30 பேர் வரை உயிரிழப்பு

1 Min Read

ஹைட்டி வரலாற்று கோட்டையில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 30 பேர் வரை பலியாகியுள்ளனர்.

கூட்ட நெரிசலில் பறிபோன உயிர்கள்

ஹைட்டி(Haiti) நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள 19ம் நூற்றாண்டை சேர்ந்த சிட்டாடல் லாஃபெரியர்(Citadel Laferriere) கோட்டையில் நடைபெற்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

யுனெஸ்கோவின் நினைவு சின்னங்களில் ஒன்றான சிட்டாடல் லாஃபெரியரில் சனிக்கிழமை நடைபெற்ற ஆண்டு விழாவின் போது இந்த விபத்து ஏற்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹைட்டி வரலாற்று கோட்டையில் கூட்டநெரிசல்: 30 பேர் வரை உயிரிழப்பு | Haiti Citadel Stampede 30 Dead

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு தலைவர் ஜீன் ஹென்றி பெட்டிட் வழங்கிய தகவலில், இந்த கூட்ட நெரிசல் விபத்தானது கோட்டையின் நுழைவாயில் பகுதியில் நடைபெற்றுள்ளது.

அத்துடன் சம்பவ இடத்தில் பெய்த கனமழையும், அங்கிருந்த நிலைமையை மேலும் மோசமாக்கி கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதாக தெரிவித்துள்ளார்.

சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

கூட்ட நெரிசல் விபத்து குறித்து அந்நாட்டின் பிரதமர் அலிக்ஸ் டிடியர் ஃபில்ஸ்-ஐம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *