வழக்கமாக நீல நிறத்தில் தோற்றமளிக்கும் வானம், மழை நேரங்களில் கருமையாக காட்சியளிக்கும்.
ஆனால் சில நாடுகளில், வானம் ரத்த சிவப்பு நிறத்தில் தோற்றமளித்து மக்களை ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது.
சிவப்பு நிறத்தில் மாறிய வானம்
நேற்று ஆப்பிரிக்கா நாடுகளான லிபியா, எகிப்து மற்றும் தெற்கு ஐரோப்பிய நாடான கிரீஸில் உள்ள கிரேட் தீவு ஆகியவற்றில் வானம் திடீரெனெ ரத்த சிவப்பு நிறத்தில் தோற்றமளித்துள்ளது.

இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், பலரும் இது அரிதான நிகழ்வு, உலக அழிவிற்கான அறிகுறி என பல்வேறு கருத்துக்களை தெரிவிக்க தொடங்கினர்.
ஆனால் இது இயற்கையான நிகழ்வு தான் என அறிவியலாளர்கள் விளக்கமளித்துள்ளார்.
சஹாரா பாலைவனத்தில் உருவான புழுதிப்புயலே அங்கிருந்த தூசிகளை காற்றில் கொண்டு சென்று, வானை சிவப்பு நிறத்திற்கு மாற்றியுள்ளது.
அந்த தூசியில் இரும்பு ஆக்ஸைடு இருப்பதால், அவை குறைந்த அலைநீளம் கொண்ட நீல ஒளியை சிதறடித்து நீண்ட அலைநீளம் கொண்ட சிவப்பு நிறத்தை மட்டும் ஊடுருவ அனுமதித்தது.
அதேவேளையில், இதனால் பார்வை தெளிவு பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.
கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் இதே போல் வானம் ரத்த சிவப்பு நிறத்தில் தோற்றமளித்தது. நரேல் புயல் வறண்ட பகுதிகளில் உள்ள இரும்பு சத்து நிறைந்த தூசிகளை வானில் சிதறடித்து இது போன்று மாற்றியது.




