22க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவரும் சிக்காடா வைரஸ் – அறிகுறிகள் என்ன?

1 Min Read

2019 ஆம் ஆண்டில் கொரோனா வைரஸ் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இதனை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு, உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

தற்போது மத்திய கிழக்கு போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாட்டால் மீண்டும் லாக்டவுன் ஏற்படுமா என்ற அச்சத்தில் மக்கள் உள்ள நிலையில், சிகாடா’ (Cicada) எனப்படும் BA.3.2 கோவிட் வகை வைரஸ் 22க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.

சிக்காடா வைரஸ்

டென்மார்க், ஜேர்மனி போன்ற நாடுகளில் சமீபத்தில் பதிவான கோவிட் பதிப்புகளில் சுமார் 30 சதவீதம் இந்த வகையை சேர்ந்தது ஆகும்.

cicada ba 3.2

அமெரிக்காவில் 23க்கும் மேற்பட்ட மாகாணங்களில் இந்த வகை வைரஸ் பாதிப்பு பதிவாகியுள்ளது.

முதல்முறையாக 2024 ஆம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவில் இந்த பாதிப்பு கண்டறியப்பட்டாலும், தற்போது இது தீவிரமாக பரவி வருகிறது.

இதில், 70க்கும் மேற்பட்ட மாறுபாடுகள் இருப்பதால், தடுப்பூசியின் வீரியத்திலிருந்தும் தப்பிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

அதேவேளையில், இதன் காரணமாக தற்போது வரை அதிகாரப்பூர்வ உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.. முந்தையை கொரோனா பாதிப்புகளை ஒப்பிடும் போது இதன் பாதிப்பும் குறைவாக உள்ளது.

உலக சுகாதார அமைப்பு(WHO) இது “கண்காணிக்கப்பட வேண்டிய வகை” என வகைப்படுத்தியுள்ளது.

அறிகுறிகள்

கடுமையான தொண்டை வலி, மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை பொதுவான அறிகுறிகளாக உள்ளது.

cicada virus symptoms

காய்ச்சல் அல்லது குளிர் நடுக்கம், தொடர் இருமல், கடுமையான சோர்வு, தசை வலி, தலைவலி, சுவை அல்லது வாசனை இழப்பு, குமட்டல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு ஆகியவை சிலருக்கு காணப்படுகிறது.

முகக்கவசம் அணிதல், சுத்தம் பேணுதல், கைகளை அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வது போன்றவற்றின் மூலம் இதிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம்.

இந்தியாவில் தற்போது வரை இதன் பாதிப்புகள் பதிவாகவில்லை என்பதால் மக்கள் பீதி அடைய தேவையில்லை.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *