அமெரிக்காவின் தேசிய உளவுத்துறைப் பணிப்பாளராக ஜே. கிளேட்டன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உளவுத்துறை பணிப்பாளரை தெரிவு செய்வதற்கு அமெரிக்க செனட் சபையில் நேற்று முன்தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் 51 இற்கு 47 என்ற வாக்கு வித்தியாசத்தில் கிளேட்டன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இப்பதவிக்கு கிளேட்டனை ஜனாதிபதி ட்ரம்ப் முதலில் தெரிவு செய்த போதிலும் அதனை செனட் சபை உறுப்பினர்கள் நிராகரித்தனர். இந்நிலையில் வாக்கெடுப்பு நடத்ததைத் தொடர்ந்து அவர் தெரிவாகியுள்ளார்.
இதன் படி தற்போது தேசிய உளவுத் துறையின் பதில் பணிப்பாளராகக் கடமையாற்றும் பில் புல்டேவுக்குப் பதிலாக இவர் நியமிக்கப்படுவார்.
நிவ்யோர்க்கின் தெற்கு மாவட்டத்திற்கான அமெரிக்க வழக்கறிஞராகப் பணியாற்றி வந்த கிளேட்டன், வெனிசுலா முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிரான போதைப்பொருள் கடத்தல் வழக்கு உள்ளிட்ட பல முக்கிய வழக்குகளை அவர் மேற்பார்வையிட்டு வந்தவரும் ஆவார். பி.பி.சி




