ஹார்முஸ் நீரிணையை கடந்த மர்ம எண்ணெய் கப்பல்- 5 ஆண்டுகளுக்கு முன்பே சிதைக்கப்பட்டதாக பதிவு

1 Min Read

மத்திய கிழக்கு பகுதியில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான போர் சூழ்நிலை தீவிரமாக இருக்கும் நிலையில், ஹோர்முஸ் நீரிணை வழியாக “ஜாம்பி” என அழைக்கப்படும் மர்ம கப்பல்கள் கடந்து செல்கின்றன.

சமீபத்தில், நபீன் (Nabiin) என அடையாளம் காட்டப்படும் எண்ணெய் கப்பலொன்று, ஹார்முஸ் நீரிணையை கடந்ததாக கப்பல் கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்த கப்பல் 2002-இல் கட்டப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு முன் பங்களாதேஷில் சிதைக்கப்பட்டதாக (Scarpped) அதிகாரப்பூர்வ பதிவுகள் கூறுகின்றன.

இதற்கு முன், ஜமால் (Jamal) என அடையாளம் காணப்படும் மற்றொரு LNG கப்பலும், கடந்த ஆண்டு இந்தியாவில் சிதைக்கப்பட்டதாக பதிவு இருந்தபோதும், ஹோர்முஸ் வழியாக கடந்தது.

Zombie tanker Strait of Hormuz, Iran Israel US war ships, Scrapped ship Bangladesh, Oil tanker Hormuz crisis, LNG carrier Jamal, Middle East maritime security, Geolocation signals ships #ZombieTanker #HormuzCrisis #MiddleEastWar #IranIsraelUS #OilTanker #MaritimeSecurity #GlobalEnergy

இவ்வாறு சிதைக்கப்பட்ட கப்பல்களின் அடையாளத்தைப் பயன்படுத்தி புதிய கப்பல்கள் இயங்குவது ‘zombie tanker’ என அழைக்கப்படுகிறது.

போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணை பெரும்பாலும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. சில கப்பல்கள் மட்டுமே ஈரான் அனுமதியுடன் அல்லது ஈரான் தொடர்புடையதாகக் கருதப்பட்டு கடந்து செல்கின்றன. மற்ற கப்பல்கள் தங்கள் இடம் குறிக்கும் சிக்னல்களை (geolocation signals) அணைத்து, கண்காணிப்பை தவிர்க்க முயற்சிக்கின்றன.

நபீன் என அடையாளம் காட்டிய கப்பல், போருக்கு முன் பாரசீக வளைகுடாவில் நுழைந்து, அங்கு பல நாட்கள் இருந்தது. பின்னர், கடந்த ஞாயிற்றுக்கிழமை வளைகுடாவை விட்டு, ஓமன் வளைகுடாவிற்கு சென்றது. கப்பல் முழுமையாக சரக்குகள் ஏற்றப்பட்டதாகக் காட்டப்பட்டாலும், அதன் இறுதி இலக்கு தெளிவாக இல்லை.

இந்த மர்ம கப்பல்கள், ஹோர்முஸ் நீரிணை வழியாக சரக்குகளை கடத்த கப்பல் உரிமையாளர்கள் எவ்வளவு சிக்கலான முறைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பதை வெளிப்படுத்துகின்றன. போர் சூழ்நிலையில், உலகளாவிய எரிசக்தி சந்தைக்கு இது மிகப் பெரிய சவாலாகும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *