ரஷ்யாவும் ஈரானும் முக்கிய அச்சுறுத்தல்… ஐரோப்பிய நாடொன்றின் பாதுகாப்பு சேவை எச்சரிக்கை

1 Min Read

ரஷ்யா, சீனா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் ஸ்வீடனுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்களாக உள்ளன என அந்த நாட்டின் பாதுகாப்பு சேவை தெரிவித்துள்ளது.

கலப்புத் தாக்குதல்கள்

நாடு எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் குறித்த அதன் வருடாந்திர அறிக்கையில் ஸ்வீடனின் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டுள்ளது.

ரஷ்யாவும் ஈரானும் முக்கிய அச்சுறுத்தல்... ஐரோப்பிய நாடொன்றின் பாதுகாப்பு சேவை எச்சரிக்கை | Iran War Threat To Sweden

உக்ரைனில் தனது போருக்கு ஆதரவாக, ஐரோப்பா முழுவதும் ஸ்திரத்தன்மையைச் சீர்குலைக்கும் கலப்புத் தாக்குதல்கள் உள்ளிட்ட அபாயகரமான முயற்சிகளில் ஈடுபடும் ரஷ்யாவிடமிருந்து முதன்மையாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து, பாதுகாப்புப் காவல்துறை சமீபத்திய ஆண்டுகளில் எச்சரித்துள்ளது.

ஈரானும் நீண்ட காலமாக ஒரு கடுமையான அச்சுறுத்தலாகக் கருதப்பட்டு வருகிறது. மேலும், கடந்த பத்தாண்டுகளாக குழுக்கள் தொடர்பான குற்றங்களின் அதிகரிப்பைச் சமாளித்து வரும் ஸ்வீடனில், குற்றக் குழுக்கள் அரசுத் தரப்பினரால் வன்முறைச் செயல்களை அரங்கேற்றப் பயன்படுத்தப்பட்டு வருவதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அச்சுறுத்தல் அதிகரிப்பு

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கையும், ஈரான் மேற்கொண்டுள்ள எதிர் நடவடிக்கைகளும், சுவீடனில் உள்ள அமெரிக்க, இஸ்ரேலிய மற்றும் யூத இலக்குகளுக்கு எதிரான அச்சுறுத்தலை அதிகரித்துள்ளதாகவும் பாதுகாப்பு சேவையின் தலைவர் Charlotte von Essen தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவும் ஈரானும் முக்கிய அச்சுறுத்தல்... ஐரோப்பிய நாடொன்றின் பாதுகாப்பு சேவை எச்சரிக்கை | Iran War Threat To Sweden

ஆனால், உண்மையில் ஈரானால் அமெரிக்காவிற்கு அச்சுறுத்தல் இல்லை என்ற நிலையில், ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநரான ஜோ கென்ட் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *