11 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானை வீழ்த்தி கிண்ணத்தை கைப்பற்றிய வங்காளதேசம்

1 Min Read

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வங்காளதேசம் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை வென்றது.

290 ஓட்டங்கள்

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டாக்காவில் நடந்தது.

Tanzid Hasan/Towhid Hridoy

முதலில் ஆடிய வங்காளதேச அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 290 ஓட்டங்கள் குவித்தது.

தன்ஸித் ஹசன் தமிம் 107 ஓட்டங்கள் விளாசினார். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்கத்தில் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன.

எனினும் சல்மான் ஆகா (Salman Agha) நிலைத்து நின்று ஆடி வெற்றிக்காக போராடினார். சதம் விளாசிய அவர் 98 பந்துகள் 106 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஆட்டமிழக்க, அணித்தலைவர் ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு நெருக்கடி ஏற்பட்டது.

Salman Ali Agha

கடைசி கட்டத்தில் பரபரப்பு

அவர் கடைசி கட்டத்தில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட, ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனால், கடைசி ஓவரை ரிஷாத் ஹொசைன் துல்லியமாக வீச, பாகிஸ்தான் அணி 279 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.

Rishad Hossain

இதன்மூலம் வங்காளதேச அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, ஒருநாள் தொடரை 11 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றியது.

ஆட்டநாயகன் விருதை வென்ற தன்ஸித் ஹசன், தொடர் நாயகன் விருதை நாஹித் ராணாவுடன் பகிர்ந்து பெற்றுக்கொண்டார்.

Bangladesh Cricket Team

Bangladesh Cricket Team

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *