ஒத்துழைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு தலைமை அளிக்கும் இந்தியா

1 Min Read

2026-ஆம் ஆண்டிற்கான 17-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை ஏற்றுள்ள நிலையில், சர்வதேச நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, தொழில்நுட்பப் புதுமை மற்றும் நிலையான வளர்ச்சியை மையமாகக் கொண்டு இந்தியா செயற்படவுள்ளது.

“மீள்தன்மை, புதுமை, ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மைக்கான கட்டமைப்பு” (Building for Resilience, Innovation, Cooperation and Sustainability) எனும் கருப்பொருளின் கீழ் இம்மாநாடு முன்னெடுக்கப்படுகிறது.

பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், நிதி உறவுகள் மற்றும் சர்வதேச நிர்வாக அமைப்புகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களை ஊக்குவித்தல் மட்டுமன்றி செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு மற்றும் நிதித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் நாடுகளுக்கு இடையேயான பகிர்வை அதிகரித்தல் என்பவற்றை நோக்காகக் கொண்டு செயற்படுகிறது.

உலகளாவிய விநியோகச் சங்கிலிப் பாதிப்புகள் மற்றும் பொருளாதாரச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் சர்வதேச பொருளாதாரத்தை வலுப்படுத்துவது மற்றும்
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளல், பசுமை நிதி (Green Finance) மற்றும் சுத்தமான எரிசக்தி மாற்றம் ஆகியவற்றில் கூட்டு முயற்சிகளை விரைவுபடுத்துதல் என்பனவும் தற்போதைய பிரதான நோக்கங்களாகும்.

பிரிக்ஸ் அமைப்பின் பார்வையை “மனிதநேயமே முதன்மை” என்ற கோட்பாட்டுடனும், வளரும் நாடுகளின் குரலை உலக அரங்கில் பலமாக ஒலிக்கும் வகையிலும் இந்தியா முன்னெடுத்துச் செல்கிறது.

அத்துடன், பருவநிலை மாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி குறித்த உயர்நிலைச் சந்திப்புகளையும், வளரும் நாடுகளுக்கான நிதியுதவிகள் தொடர்பான ஆலோசனைகளையும் இந்தியா ஒருங்கிணைத்து வருகிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *