தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் நடிப்பில் H.வினோத் இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியாமணி மற்றும் நரேன் என பலர் நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று (23) வெளியானது.
விஜயின் திரைப்பயணத்தில் இதுவே அவரது கடைசித் திரைப்படம் என்பதால், இரசிகர்கள், தவெகவினர் மற்றும் திரையுலகினர் ஜனநாயகன் படத்தை கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
திரையரங்குகள் முன்பு பட்டாசுகள் வெடித்தும், தோரணங்கள் கட்டியும் ஆட்டம்பாட்டம் என உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இப்படத்தைக் கொண்டாடும் விதமாக இரசிகர்கள் மற்றும் தவெக கட்சியைச் சேர்ந்தவர்கள் திரையரங்கம் முழுக்க ஜனநாயகன் திரைப்பட பதாகையுடன் சேர்த்து, முதலமைச்சர் விஜய் நடிகராக இருந்தபோது நடித்த முன்னணி படங்கள் சிலவற்றின் பதாகைகளையும் வைத்திருந்தனர்.
மேலும், அந்த பதாகைகளுக்கு மாலை அணிவித்தும், பாலாபிஷேகம் செய்தும் அவர்கள் கொண்டாடினர். தொடர்ந்து, 69 கி.கி கேக்கை வெட்டிய ரசிகர்கள், சுமார் ஆயிரம் பேருக்கு விஜய் உருவம் பொறித்த ‘ஜனநாயகன் டி சர்ட்’ மற்றும் தவெக கட்சியின் சின்னமான ‘விசில்’ ஆகியவற்றை வழங்கி மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழ்நாடு மற்றும் கேரளா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுவதும் விஜய் இரசிகர்கள், இத்திரைப்படத்தை உற்சாகமாக வரவேற்றனர்.
தமிழ்நாடு மற்றும் கேரளா மட்டுமின்றி மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா என உலகம் முழுவதும் விஜய் இரசிகர்கள், இத்திரைப்படத்தை உற்சாகமாக வரவேற்றனர்.
திரையரங்குகள் முன்பு பிரம்மாண்ட தோரணங்கள், பாலாபிஷேகம், பட்டாசு வெடிப்புகளுடன் கொண்டாட்டங்கள் களைகட்டின.
விஜயின் பழைய ஹிட் படங்களின் பதாகைகளுக்கும் இரசிகர்கள், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
69 கிஎகி எடையில் பிரம்மாண்ட கேக் வெட்டப்பட்டதோடு, 1000 பேருக்கு விஜய் உருவம் பொறித்த ‘ஜனநாயகன்’ டி-ஷர்ட் மற்றும் தவெக கட்சியின் ‘விசில்’ ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன.
இந்தியாவில் மட்டும் 13,000 இற்கும் மேற்பட்ட காட்சிகளுடன், ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியானது.
இந்திய வசூல்: முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ. 48.27 கோடி (இந்திய மதிப்பில்) வசூலாகியுள்ளது.
வெளிநாட்டு வசூல்: சர்வதேச அளவில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
மொத்த வசூல்: உலகளவில் முதல் நாளிலேயே ரூ. 78.27 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. ஒன்லைன் அல்லாத நேரடி டிக்கெட் விற்பனையையும் சேர்த்தால் இந்தத் தொகை இன்னும் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.




