ஈரான் மீதான போருக்கு எதிராக பிலிப்பைன்ஸில் ஆர்ப்பாட்டம்

1 Min Read

ஈரான் மீது அமெரிக்கா முன்னெடுக்கும் போருக்கு எதிராக பிலிப்பைன்ஸின் தலைநகரில் ஆர்ப்பாட்டமொன்று நேற்று இடம்பெற்றது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் மணிலாவில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ பங்குபற்றியுள்ளமைக்கும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு ‘போர்க் குற்றவாளிகள் வரவேற்கப்பட மாட்டார்கள்’. ‘ட்ரம்பைத் தடை செய்’, ரூபியோவைத் தடை செய்’ என்று எழுதப்பட்ட பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியுள்ள மனித உரிமை ஆர்வலர் கிறிஸ்டினா பலபே, ‘அமெரிக்கா, குறிப்பாக ட்ரம்பின் கீழ், உலகின் முதன்மையான போர்க் குற்றவாளியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

ரூபியோவுடன் பணியாற்றுவதை நிறுத்துமாறு ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியரின் அரசாங்கத்தை வலியுறுத்திய மற்றொரு எதிர்ப்பாளரான மோங் பலடினோ, ரூபியோவின் வருகை பிலிப்பைன்ஸில் அதிக அமெரிக்க இராணுவ தளங்களுக்கு வழிவகுக்கும். அவரது வருகை நமது இயற்கை வளங்களை மேலும் இழக்கவும் வித்திடும்’ என்று கூறினார். இந்நிலையில் அமெரிக்காவும் ஈரானும் மோதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஆசியானின் வெளியுறவு அமைச்சர்கள் அழைப்பு விடுத்தனர்.

அல் ஜசீரா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *