பிரித்தானிய கடற்கரைக்கு அப்பால் ரஷ்யா துப்பாக்கி சூட்டு பயிற்சி

1 Min Read

ரஷ்ய கடற்படைக் கப்பலொன்று பிரித்தானிய கடற்கரைக்கு அப்பால் அரிதான நேரடித் துப்பாக்கிச் சூட்டு பயிற்சியொன்றை நேற்று மேற்கொண்டதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.

பிரித்தானியாவின் புதிய பிரதமராக அண்டி பர்ன்ஹாம் பதவியேற்ற மறுநாளான நேற்று ரஷ்யா இப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறது. அதுவும் புதிய பிரதமர் உக்ரைனுக்கான தமது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் இப்பயிற்சி இடம்பெற்றுள்ளது. நியூஸ்ட்ராஷிமி என்று பிரித்தானிய ஊடகங்களால் அடையாளம் காணப்பட்டுள்ள இக்கப்பல், தென்மேற்கு இங்கிலாந்தில் உள்ள துறைமுக நகரான பிளைமவுத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல்கள் தொலைவில் சர்வதேச கடற்பரப்பில் இப்பயிற்சியை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர், எங்கள் கடற்படை அப்பயிற்சியை முழுமையாகக் கண்காணித்து, கப்பலின் செயல்பாடுகளைத் தொடர்ந்து உன்னிப்பாகக்அவதானித்து வருகிறது. பிரித்தானியாவின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய ரோயல் கடற்படை தயாராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார். சமீபத்திய மாதங்களில் பிரித்தானியாவின் கடற்கரைக்கு அருகில் ரஷ்ய கடற்படை நடவடிக்கைகள் அதிகரித்துள்ள சூழ்நலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

சி.என்.என்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *