முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான யோஷித ராஜபக்சவுக்கு எதிராகப் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதைத் தடுக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்குச் சட்ட மாஅதிபர் இன்று (22) உயர்நீதிமன்றத்தில் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
யோஷித ராஜபக்சவினால் சமர்ப்பிக்கப்பட்ட விசேட மேன்முறையீட்டு மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணைகளை முன்னெடுத்துச் செல்வதைத் தடுக்கும் வகையில் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு யோஷித ராஜபக்சவின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, இந்தக் கோரிக்கைக்குத் தமது தரப்பு இணங்கப் போவதில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்ததுடன், அதற்கான ஆட்சேபனைகளையும் முன்வைத்தார்.




