பிரித்தானியாவின் 59 வது பிரதமராக நேற்று பதவி ஏற்றுக் கொண்ட அண்டி பர்ன்ஹாம், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத மாற்றங்களைக் கொண்டு வருவதாகக் குறிப்பிட்டார்.
பதவியேற்பு வைபவத்தைத் தொடர்ந்து ஆற்றிய உரையில் மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர், 1980 களில் பிரித்தானியா சில தவறான தீர்மானங்களை எடுத்தது. ஏனெனில் சிறப்பாகச் செயல்பட வேண்டியிருந்ததே அதற்கு காரணம்.
அதனால் அரசியல் அதிகாரம் மையப்படுத்தப்பட்டது, பொருளாதார அதிகாரம் தனியார்மயமாக்கப்பட்டது. நாட்டின் பெரும்பகுதிகள் தொழில்மயமாக்கலை இழந்தன.
என்றாலும் ஒரு புதிய பொருளாதாரத்தை உருவாக்குவதாகவும், அத்தியாவசியப் பொருட்கள் மீண்டும் மலிவு விலையில் கிடைக்கச் செய்வதற்காக அவற்றை பொதுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதாகவும், பிரித்தானியாவை மீண்டும் தொழில்மயமாக்கி கைத்தொழில்துறைக்கு ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
அத்தோடு இந்த ஆண்டின் பிற்பகுதியில், பிரித்தானியாவுக்கான 10 ஆண்டுத் திட்டத்தை முன்வைப்பதாகவும் மேலும் தமது உரையில் கூறினார்.
தன்னை ஒரு கத்தோலிக்கர் என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் முதல் பிரித்தானிய பிரதமராக விளங்கும் பர்ஹாம், பிரித்தானியாவின் மத மற்றும் அரசியல் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறார்.
பல நூற்றாண்டுகளாக கத்தோலிக்கர்கள் பிரதமராக வருவதைத் தடுத்த சட்டங்களையும் மரபுகளையும் கருத்தில் கொள்ளும்போது, பர்ன்ஹாமின் பதவியேற்பு நம்பிக்கை அளிப்பதாக நோக்கப்படுகிறது. 1829 இல் கத்தோலிக்கர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆவதற்கு ஏற்ப சட்டங்கள் திருத்தப்பட்ட போதிலும், கத்தோலிக்கர் ஒருவர் பிரதமராவது பல ஆண்டுகளாக சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. இங்கிலாந்து திருச்சபையில் ஆயர்களின் நியமனங்கள் குறித்து மன்னருக்கு ஆலோசனை வழங்கும் பிரதமரின் பங்கு இதற்கு முக்கிய காரணமாகும்.
இவரும் அவரது மனைவியும் தங்கள் மூன்று பிள்ளைகளையும் கத்தோலிக்கப் பாடசாலைகளுக்கு அனுப்பினர். தனது இளமைப் பருவத்தில் அவர் பீடப் பணியாளராகப் பணியாற்றியுள்ளார்.
சி.என்.என், பி.பி.சி




