வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை 1,236,695 ஆக பதிவு

1 Min Read

ஜூலை மாதத்தின் முதல் 15 நாட்களில் 90,122 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதிகார சபையின் தரவுகளின்படி, குறித்த காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து 20,480 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன் அது நாட்டுக்கு வருகை தந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளில் 23 வீதமாகும்.

அதேபோன்று, சீனாவிலிருந்து 5,494 பேரும், பிரிட்டனிலிருந்து 9,277 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 5,487 பேரும் இக்காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அதே வேளை இவ்வருடத்தின் ஜனவரி 01 முதல் ஜூலை 15 வரையான காலப்பகுதியில் ஒட்டுமொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகை 1,236,695 ஆகப் பதிவாகியுள்ளது. அவர்களில் இந்தியாவிலிருந்து 314,163 சுற்றுலாப் பயணிகளும்,பிரிட்டனிலிருந்து 117,844 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *