முல்லைத்தீவில் 5,500 இற்கும் மேற்பட்ட சட்டவிரோத மதுபானப் போத்தல்களுடன் ஒருவர் கைது

1 Min Read

முல்லைத்தீவில் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த 5,575 மதுபானப் போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் சிக்கினார்.

இலங்கை கடற்படை, முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து நேற்று (14) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த மதுபானப் போத்தல்கள் அடங்கிய தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் சட்டத்தின் பிடியில் சிக்கவைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, கிழக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான கோட்டாபய கடற்படைத் நிறுவனத்திற்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில், முல்லைத்தீவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட கூட்டு நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 5,575 மதுபானப் போத்தல்களுடன் சந்தேகநபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் முல்லைத்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறித்த சந்தேகநபர் மற்றும் சட்டவிரோத மதுபானப் போத்தல்கள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முல்லைத்தீவு மதுவரித் திணைக்கள அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *