ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதிலடிப் போர்

1 Min Read

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளதால் மத்திய கிழக்கில் பதற்றங்கள் அதிகரித்துள்ளன. இந்த அறிவிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளியானதையடுத்து ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா தீவிரப்படுத்தியது.இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத், கட்டார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளை ஈரான் கடுமையாகத் தாக்கியதாகவும் சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த ஜூன் 17-ம் திகதி அமைதி ஒப்​பந்​தம் ஏற்​பட்​டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹோர்முஸ் நீரிணை கப்​பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்​பட்​டது.எனினும், ஈரானின் கடலோர பகு​தி​யில் உள்ள வழித்​தடத்​தில்​தான் கப்பல்கள் செல்ல வேண்​டும் என்றும், ஓமான் கடற்​கரையை பயன்படுத்தி ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்​றால் தாக்​குதல் நடத்தப்படும் என ஈரான் தெரிவித்திருந்தது. இந்​நிலை​யில், மார்​ஷல் தீவு எண்​ணெய்க் கப்​பல் அல் ரெஹா​யத், சவூதி கப்​பல் வெட்​யான், லைபீரியா கப்​பல் சைப்​ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய 3 எண்​ணெய் கப்​பல்​கள் ஓமான் கடற்​கரையூடாக ஹோர்முஸ் நீரிணையை சமீபத்தில் கடந்​தன. அவற்​றின் மீது ஈரான் இராணுவத்​தினர் தாக்​குதல் நடத்​தியதையடுத்து பதிலுக்கு ஈரான் மீது அமெரிக்கா குண்டு வீசி தாக்​குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ஈரான் இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ‘ஹோர்முஸ் நீரிணை அடுத்த அறிவிப்பு வரும் வரையிலும், இப்பகுதியில் அமெரிக்கத் தலையீடுகள் முடிவுக்கு வரும் வரையிலும் மூடப்பட்டிருக்கும். எந்தக் கப்பலும் இதன் வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது. இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் பதிலடி நடவடிக்கை எடுக்கப்பட்டால், அதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்” என்று எச்சரித்தது.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே, ஹோர்முஸ் வழியாக சென்ற சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான கொள்கலன் கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்களைத் தொடங்கியது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, அமெரிக்க இராணுவம் தெரிவித்ததுள்ளது. ‘சுமார் நான்கு மணி நேரம் கழித்து, தாக்குதல்கள் நிறைவடைந்தன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *