சீனாவின் கிழக்குக் கடற்கரையை பாவி புயல் தாக்கியுள்ளதோடு மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கையும் ஏற்படுத்தியுள்ளது. சுமார் 28 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு சீனாவின் பிரதான நிலப்பரப்பைத் தாக்கிய மிகவும் சக்திவாய்ந்த புயலாக விளங்கும் பாவி, கிழக்குக் கடற்கரையில் நேற்று கடும் மழை பெய்ததோடு மக்கள் அடர்த்தி கொண்ட நகரங்களும் பலத்த காற்றின் தாக்கத்திற்கு உள்ளானது.
சனிக்கிழமை இரவு சுமார் 11:20 மணியளவில் ஸெஜியாங்கின் கடலோர நகரமான யுஹுவானைத் தாக்கிய பாவி புயல், நள்ளிரவில் வென்ஜோ நகரின் ஒரு பகுதியான யுக்கிங்கில் இரண்டாவது முறையாகக் கரையைக் கடந்தது. முதலில் யுஹுவான் நகரில் கரையைக் கடந்த இப்புயல், மணிக்கு 144 கிலோமீற்றர் வேகத்தில் வீசியதாக சீன அரச ஊடகமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
இப்புயலின் விளைவாக தாய்வானில் 134 பேர் காயமடைந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
ஏ.பி.சி. நியூஸ்




