வருடாந்த கதிர்காம பாதயாத்திரையில் ஈடுபடும் பக்தர்களுக்காக, வனப்பாதையூடாகப் பயணிப்பதற்கான காட்டுப் பாதை இன்று (10) காலை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த காட்டுப் பாதை ஜூலை 24 ஆம் திகதி வரை பக்தர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வனவிலங்குகளின் வாழ்விடங்களைச் சேதப்படுத்துவதை தவிர்ப்பதோடு, கழிவுகளைப் பொறுப்புடன் அப்புறப்படுத்துமாறும் பக்தர்களுக்கு வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களம், அறிவுறுத்தி ஒரு விசேட வழிகாட்டலையும் வெளியிட்டுள்ளது.
நிலவும் வரண்ட வானிலை காரணமாக, காட்டு விலங்குகளிடமிருந்து பக்தர்களைப் பாதுகாக்க விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்களின் பாதுகாப்பிற்காக முப்படைகளும் பொலிஸாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.




