உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் மூவர் பலி, பத்து பேர் காயம்

1 Min Read

தென்கிழக்கு உக்ரைனில் ரஷ்யா முன்னெடுத்த தாக்குதல்களில் குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதோடு பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டினிப்ரோ பெட்ரோவ்ஸ்க் பகுதியை ஆளில்லா விமானங்கள் மூலம் ரஷ்யா தாக்கியதில், ஐந்து பெற்றோல் நிலையங்கள் சேதமடைந்ததோடு பெண்ணொருவரும் கொல்லப்பட்டார் என்று ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா கூறியுள்ளார். முன்னரங்குப் பகுதியிலிருந்து 1,300 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றை உக்ரைன் தாக்கியதைத் தொடர்ந்து ரஷ்யா மேற்படி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

ரஷ்யாவின் உட்பகுதிகளில் புதிய தாக்குதல்களை நடத்தி, தனது நீண்ட தூர ஆளில்லா விமானத் தாக்குதல் நடவடிக்கையை விரிவுபடுத்தி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு ரஷ்யாவில் உள்ள உஃபாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமொன்றையும், பென்சா பகுதியில் உள்ள ரஷ்யாவின் இராணுவ கைத்தொழில்துறை வளாகத்தின் ஒரு மூலோபாய வசதி என்று அவர் விவரித்த ஒன்றையும் உக்ரைன் இலக்கு வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அல் ஜசீரா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *