லாகூரில் கட்டட கூரை இடிந்து விழுந்து 14 மாணவர்கள் பலி

1 Min Read

பாகிஸ்தானின் கிழக்கு நகரமான லாகூரில், நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருந்த பயிற்சி நிலையமொன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 14 பாடசாலை மாணவர்கள் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக பொலிஸாரும் மீட்புப் பணியாளர்களும் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் எட்டு சிறுவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் துறையின் சிரேஷ்ட அதிகாரி பைசல் கம்ரான் கூறினார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து பயிற்சி மையத்தின் உரிமையாளர் மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இடிபாடுகளுக்கு அடியில் மேலும் சிறுவர்கள் சிக்கியிருக்கலாம் என்ற தகவல்கள் கிடைத்ததை அடுத்து, மீட்புப் படையினர் இடிபாடுகளுக்குள் தேடி வருவதாக கம்ரான் கூறினார். அப்பயிற்சி மையம் ஒரு பழமையான கட்டடத்தில் இயங்கி வந்ததாகவும், கட்டுமானத்தின் தரம் குறைவாக இருந்ததால், கட்டி முடிக்கப்படாத இரண்டாவது மாடியின் கூரை இடிந்து விழுந்திருக்கலாம் என்றும் அவர் மேலும் கூறினார். சி.என்.என்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *