நதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட கண் பார்வையற்ற தாயும் குழந்தையும்: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள செய்தி

1 Min Read

இந்தியாவின் கேரள மாநிலத்திலுள்ள நதி ஒன்றில், கண் பார்வையற்ற ஒரு பெண்ணும் ஒரு குழந்தையும் கண்டெடுக்கப்பட்டுள்ள விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட தாயும் குழந்தையும்

நேற்று மதியம் 2.00 மணியளவில், கேரளாவின் கொச்சியிலுள்ள Piravom என்னுமிடத்தில், மூவாற்றுப்புழா என்னும் நதியில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தையின் உடல்கள் மிதந்துவருவது தெரியவந்தது. அந்த உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், அந்தப் பெண்ணின் பெயர் விஜி (35) என்பதும், அந்தக் குழந்தை அவரது இரண்டு வயது மகன் என்பதும் தெரியவந்தது.

விஜியின் கணவர் பெயர் நாராயணன். தம்பதியருக்கு இரண்டு பிள்ளைகள். இப்போது உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டது விஜியின் இரண்டாவது குழந்தை.

இதற்கிடையில், நாராயணனை தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. விஜி, கண் பார்வைத் திறனற்றவர் ஆவார்.

அவர் தன் குழந்தையுடன் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள முடிவு செய்திருக்கக்கூடும் என அதிகாரிகள் கருதும் நிலையில், அது உண்மையா என்பது உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே தெரியவரும்.

இந்த துயர சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ள நிலையில், சைபர் செல் உதவியுடன் நாராயணனையும் தம்பதியரின் மூத்த பிள்ளையையும் தேடும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *