எல் நினோ வானிலை காரணமாக பனி மற்றும் வரட்சி ஏற்படுவதால் பப்புவா நியூ கினியா உணவுப் பற்றாக்குறை அபாயத்தை எதிர் கொண்டுள்ளது.
இந்த வானிலையின் விளைவாக பசுபிக் பிராந்திய நாடான பப்புவா நியூ கினியா மிக மோசமாகப் பாதிக்கப்படும் என்றுள்ள ஒக்ஸ்பாம் நிறுவனம், நாடு முழுவதும் 3 மில்லியன் மக்கள் வரை பாதிப்புக்களை எதிர்கொள்வர் எனவும் கணிப்பிட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தையும் வருமானத்தையும் வழங்கி வந்த உணவுத் தோட்டங்கள் பனி மற்றும் வரட்சியால் அழிவுற்றுள்ளது. இதன் விளைவாக, மலைப்பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களது பயிர்ச்செய்கைகளின் விளைச்சலும் வீழ்ச்சியடைந்துள்ளது.
வரட்சி, குறைந்துவரும் நீர்மட்டம் மற்றும் பனி வானிலையைத் தொடர்ந்து நாட்டின் அதிக விவசாய உற்பத்தித் திறன் கொண்ட சில பகுதிகளில் உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஒக்ஸ்பாம் பப்புவா நியூ கினியாவின் கூற்றுப்படி, எல் நினோவின் தாக்கங்களால் பசுபிக் பிராந்தியத்தில் பப்புவா நியூ கினியா தற்போது மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது. மழைப்பொழிவு சராசரி விகிதத்துக்கும் குறைவாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
த கார்டியன்




