இந்திய ஏ அணி வலுவான நிலையில்

1 Min Read

இலங்கை ஏ அணிக்கு எதிரான முதலாவது நான்கு நாள் போட்டியின் முதல் நாள் முடிவில் இந்திய ஏ அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 333 ஓட்டங்களுடன் வலுவான நிலையில் உள்ளது.

காலி சர்வதேச அரங்கில் நேற்று (25) ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய ஏ அணிக்கு சாய் சுதர்ஷன் 132 ஓட்டங்களைப் பெற்று வலுச் சேர்த்தார். அவர் இதன்போது 175 பந்துகளுக்கு முகம்கொடுத்து 19 பௌண்டரிகளுடனேயே இந்த ஓட்டங்களைப் பெற்றார்

இதன்மூலம் முதல் நாள் ஆட்டநேர முடிவின்போது இந்திய ஏ அணி 86 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 333 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. அணித் தலைவர் துருவ் ஜூர் (68) மற்றும் ஷெய்க் ரஷீத் (53) ஆகியோர் அரைச் சதங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் உள்ளனர். இலங்கை ஏ அணி சார்பில் திலும் சதீர 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இன்று போட்டியில் இரண்டாவது நாளாகும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *