தமது பிரதமர் பதவியையும் தொழிலாளர் கட்சியின் தலைமைப் பதவியையும் இராஜிநாமா செய்வதாக திங்களன்று அறிவித்த நிலையில் கீர் ஸ்டார்மர், அந்தப் பதவிகளுக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள அண்டி பர்ன்ஹாமுடன் இரகசிய சந்திப்பொன்றை நடத்தியுள்ளார்.
இச்சந்திப்பு ஒரு மணித்தியாலயம் நீடித்ததாகவும் அதிகாரப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக இச்சந்திப்பு இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரேட்டர் மான்செஸ்டரின் முன்னாள் மேயரும், மேக்கர்ஃபீல்ட் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளவரும் தான் அண்டி பர்ன்ஹாம் ஆவார். அவரது ஆதரவாளர் ஜோஸ் சைமன்ஸ் மேக்கர்பீல்ட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் அண்டி பர்ன்ஹாம் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவுக்கான தூதுவராக பீட்டர் மண்டல்சன் நியமிக்கப்பட்டமை, தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப் படி பிரித்தானிய பொருளாதாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படாமை, தேசிய சுகாதார சேவையில் நிலவும் குளறுபடிகள் போன்ற காரணங்களினால் பிரதமர் ஸ்டார்மருக்கு கட்சிக்குள் கடும் அழுத்தங்கள் ஏற்பட்டன. அந்த பின்புலத்தில் பிரதமர் பதவியில் இருந்தும் தொழிற்கட்சி தலைமைப் பதவியில் இருந்தும் அவர் விலகத் தீர்மானித்து பதவி விலகுவதற்கான அறிவிப்பை விடுத்தமை தெரிந்ததே.
டெலிகிராப்




