தங்கள் நாட்டு சனத்தொகையைப் 10 மில்லியன்களாகக் கட்டுபடுத்துவதற்கான வாக்கெடுப்பை சுவிட்சர்லாந்து நேற்று நடத்தியுள்ளது. இத்திட்டத்திற்கு வலதுசாரி சுவிஸ் மக்கள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
வீட்டுவசதி, பொதுச் சேவைகள் மற்றும் சுற்றுச்சூழல் மீதான அழுத்தத்தைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு நிலைத்தன்மை முயற்சி இது என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அரசாங்கம் இதை ஒரு குழப்ப முயற்சி என்று வர்ணித்துள்ளது.
பிற அரசியல் கட்சிகள், வணிகத் தலைவர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் குறிப்பிடும் போது, இது மருத்துவமனைகள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு மிகவும் தேவையான பணியாளர்களை இழக்கச் செய்யும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் கடின உழைப்பால் பெறப்பட்ட உறவுகளைச் சேதப்படுத்தும் என்றும், ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லாத சுவிட்சர்லாந்தை மிகவும் அபாயகரமான உலகில் தனிமைப்படுத்திவிடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன.
2002-ல் 7.3 மில்லியனாக இருந்த சுவிட்சர்லாந்தின் மக்கள் தொகை, அதன் பின்னர் வேகமாக வளர்ந்துள்ளது.
தற்போது 9.1 மில்லியன் மக்கள் உள்ளனர், அவர்களில் 27% பேர் வெளிநாட்டில் பிறந்த சுவிஸ் குடியிருப்பாளர்களாவர்.
சுவிட்சர்லாந்தின் நேரடி ஜனநாயக முறைப்படி, அனைத்து முக்கிய முடிவுகளும் வாக்களிப்பு மூலமாகவே எடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



