லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் யுத்த நிறுத்த மற்றும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் வொஷிங்டனில் மீண்டும் ஆரம்பமாகும் என்று அமெரிக்கத் தூதர் மைக்கேல் இசா நேற்று தெரிவித்துள்ளார். லெபனானின் தற்போதைய நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்ட பேச்சுவார்த்தைகளின் போக்கு மற்றும் முயற்சிகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்கத் தூதர், லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவுனை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். அச்சமயமே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த தூதுவர், லெபனான் ஜனாதிபதி அண்மையில் ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்திருந்த கருத்துக்களுக்கு அமெரிக்காவின் பாராட்டுகளைத் தெரிவித்ததாகவும், பேச்சுவார்த்தை செயல்முறையை முன்னெடுத்துச் செல்வதில் அவை முக்கியமானவை என்றும் கூறினார்.
லெபனான்-இஸ்ரேல் பேச்சு மீண்டும் அமெரிக்காவில்

Leave a Comment


Subscribe to our newsletter to get our newest articles instantly!
Most Read
- Advertisement -
