தென்னாபிரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் வெளியேற காலக்கெடு

1 Min Read

தென்னாபிரிக்காவில் சட்டவிரோதமாக வசிப்பவர்கள் ஜூன் 30 ஆம் திகதிக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய போராட்டங்களில் முன்னணியில் உள்ள ‘மார்ச் அன்ட் மார்ச்’ என்ற பிரச்சாரக் குழு இக்காலக்கெடுவை விதித்துள்ளது.

சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிரான பேரணிகள் வேகம் பெற்று வரும் நிலையில், சட்டப்பூர்வ அந்தஸ்து சிறிதளவே பாதுகாப்பு அளிப்பதாக ஆபிரிக்க புலம்பெயர்ந்தோர் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேறக் கோரி நடத்தப்பட்ட தொடர் பேரணிகள், நாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்த வெளிநாட்டினர் மீதான வெறுப்பு உணர்வை மீண்டும் தூண்டியதால், தென்னாபிரிக்காவில் உள்ள ஆபிரிக்க புலம்பெயர்ந்தோர் அச்சத்தில் வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் மொசாம்பிக், வெளிநாட்டினர் மீதான வெறுப்புத் தாக்குதல்களில் தங்கள் நாட்டைச் சேர்ந்த ஐந்து குடிமக்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. தெற்குக் கடற்கரையில் உள்ள மோசல் பேயில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் இரண்டு மொசாம்பிக்கர்களும் ஒரு தென்னாபிரிக்கரும் உயிரிழந்ததாக தென்னாப்பிரிக்க பொலிஸார் கூறியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *