ட்ரோன் கொள்வனவுக்கு 2 பில். டொலர் செலவிட இந்தியா திட்டம்

1 Min Read

உலகளாவிய மற்றும் பிராந்திய மோதல்களின் விளைவாக இரண்டு பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட பெறுமதி மிக்க இராணுவ ட்ரோன்களை கொள்வனவு செய்வதற்கு இந்தியா திட்டமிட்டுள்ளது.

இராணுவ ட்ரோன்களை தயாரிக்கும் உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து இவை கொள்வனவு செய்யப்படவிருப்பதாக இராணுவ கைத்தொழில் தயாரிப்பு நிறுவனமொன்று ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளது. 18 முதல் 24 மாதங்களுக்குள் இந்த ட்ரோன்கள் விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை 313 மில்லியன் டொலர் மதிப்பிலான தந்திரோபாய வகை ட்ரோன்களுக்காக அரசாங்கம் சமீபத்தில் கேள்விமனுவை வழங்கியுள்ளது.

அவசர செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட விரைவு கொள்முதல் முறையைப் பின்பற்றி இந்த புதிய கொள்முதல்கள் அமையலாம் என்றும், 24 மாதங்களுக்குள் ட்ரோன்கள் விநியோகிக்கப்பட வாய்ப்புள்ளது என்று அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

இதேவேளை இந்தியாவின் முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிடும் ​போது, ட்ரோன்களை அதிகளவில் பயன்பாட்டுக்கு சேர்ப்பதை விரைவுபடுத்துவதற்காக, அவசர அல்லது விரைவு கொள்முதல் முறையைப் பின்பற்றப்படுகிறது என்றுள்ளார்.

இந்தியாவில் ட்ரோன்கள் மற்றும் அதன் பாகங்களைத் தயாரிக்கும் 600 இற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 100 இற்கும் மேற்பட்டவை பாதுகாப்புப் பயன்பாடுகளில் கவனம் செலுத்துவது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *