எபோலா நோயாளர்கள் ஐவர் குணமடைந்து வீடுதிரும்பினர்

1 Min Read

அரிதான வகை எபோலா வைரஸ் நோய்க்கு உள்ளான ஐந்து நோயாளர்கள் குணமடைந்துள்ளனர் என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று முன்தினம் தெரிவித்தார்.கொங்கோவுக்கு விஜயம் செய்துள்ள உலக சுகாதார ஸ்தாபனப் பணிப்பாளர் நாயகம் கிழக்கு கொங்கோவில் நோய் பரவலின் மையமாக உள்ள புனியா நகருக்கு சென்றிருந்தபோது மேற்கண்டவாறு கூறினார்.இந்நோய்க்கு உள்ளாகி குணமடைந்துள்ள ஐவரும் வைத்தியசாலையை விட்டு வெ ளியேற அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொங்கோ சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்நிலையில் புனியாவில் புதிய எபோலா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்து உரையாற்றிய உலக சுகாதார ஸ்தாபனத்தின் செயலாளர் நாயகம், நேற்று நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். நேற்று முன்தினம் ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார்.

நாங்கள் இன்னும் தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். மக்கள் எபோலாவிலிருந்து குணமடைய முடியாது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளார்.இதேவேளை உலக சுகாதார ஸ்தாபனம், அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை அல்லது தடுப்பூசி இல்லாத எபோலாவின் தற்போதைய இனமான புண்டிபுக்யோ வைரஸிலிருந்து ஒரு நோயாளி குணமடைந்துள்ளதாக கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *