மாகாணசபைத் தேர்தல் உடன் நடத்தப்படுவது அவசியம்

2 Min Read

மாகாண சபை தேர்தலை இழுத்தடிப்பு செய்யாமல் அரசாங்கம் உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். பழைய தேர்தல் முறையில் மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என 43 கட்சிகள் ஒன்றிணைந்து முடிவெடுத்திருக்கின்றனர். எனவே, அரசாங்கம் சாக்குப் போக்கு சொல்வதை விடுத்து விரைவாக அதனை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் நேற்று வியாழக்கிழமை(28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜே. வி. பி எதிர்க்கட்சியில் இருக்கும்போது மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்கள்.

2018 ஆம் ஆண்டு கலைக்கப்பட்ட மாகாண சபை புதிய தேர்தல் மூலமாக இன்னும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு வரவில்லை. தாங்கள் நினைத்தால் மாகாண சபையை கொண்டு வரலாம். இல்லாத விட்டால் ஆளுநரின் ஆட்சியின் கீழ் கொண்டு வரலாம் என்ற நிலையைப்பாட்டில் இவர்கள் பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு ஒரு தீர்வு என்று 13 வது திருத்தச் சட்டத்தைச் சொல்லுகின்றார்கள். ஆனால், 13வது திருத்தத்தில் மாகாண சபைகளுக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரியவில்லை. எனினும், மாகாண சபையை இயங்க விடாமல் தடுப்பது என்பது ஜனநாயகத்துக்கு மாறான ஒரு செயற்பாடாக அமைந்திருக்கிறது. இந்த வருடத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டும். பழைய தேர்தல் முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என 43 கட்சிகள் ஒன்றிணைந்து முடிவெடுத்திருக்கின்றனர்.

எனவே, இந்த தேர்தலை அரசாங்கம் இழுத்தடிக்கின்ற சாக்குப் போக்குகள் சொல்லுகின்றதாக அவர்களது செயல்பாடு காணப்படுகின்றது.

நாங்கள் கேட்டுக் கொள்வது மாகாண சபை தேர்தலில் நிச்சயமாக இவ்வருடத்திற்குள் நடத்த வேண்டும். ஜேவிபி யின் செயலாளர் இந்த வருடத்திற்கும் மாகாண சபை தேர்தல் நடைபெறாது எனத் தெரிவித்திருக்கின்றார். அரசாங்கம் இது பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

43 கட்சிகள் தேர்தலில் நடத்துமாறு கேட்டுக் கேட்டிருக்கின்றதனால் தேர்தலை நடாத்த வேண்டிய அவசியம் உணரப்பட்டிருக்கின்றது.

இல்லை என அரசாங்கம் இழுத்தடிப்பு செய்யுமாக இருந்தால் அரசாங்கம் தேர்தலை கண்டு பயப்படுகின்றதா என மக்கள் பேசக்கூடிய நிலைமை உருவாகும்.

ஜனாதிபதி தேர்தலில் 56 இலட்சம் வாக்குகளை அனுரா குமார திசநாயக்கா பெற்றிருந்தார். பாராளுமன்றத் தேர்தலில் 68 லட்சம் வாக்குகளைப் பெற்றிருந்தார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 46 இலட்சம் வாக்குகளை பெற்றிருக்கின்றார்கள்.

ஜனாதிபதி தேர்தலோடு ஒப்பிட்டுப் பார்க்கின்ற பொழுது கணிசமான வீழ்ச்சி உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலையின் காரணமாக தான் மாகாண சபை தேர்தலை சந்திப்பதற்கு தேசிய மக்கள் சக்தியினர் அஞ்சுகின்றார்களோ என்ற சந்தேகம் மக்கள் பேச புறப்பட்டிருக்கிறார்கள்.

97 விதமான தொழிற்சாலைகள் வடக்கு கிழக்குக்கு வெளியேதான் இருக்கின்றன. 3 தசத்துக்கும் சற்று அதிகமான தொழிற்சாலைகள்தான் வடக்கு கிழக்கில் இருக்கின்றன. எனவே வடக்கு கிழக்கில் தொழில் வாய்ப்பை பெறுவதற்கு இளைஞர்களும் யுவதிகள் மிகவும் கஷ்டப்படுகின்ற சூழ்நிலை இருக்கின்றது.

இதனால் அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று வேலை செய்கின்றார்கள் என அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *