இரண்டு மாதங்களாக தரித்து நிற்கும் இரு எப் 35 விமானங்கள்

1 Min Read

அமெரிக்காவின் டெக்சாஸ் தொழிற்சாலையிலிருந்து புறப்பட்டபோது ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகளை விமானிகள் தெரிவித்ததை அடுத்து, அசோரஸ் தீவில் எப்-35 விமானங்கள் இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பிரித்தானியாவுக்கு மேற்கொண்ட தங்களின் முதல் பயணத்தின் போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகள் காரணமாக, இரண்டு எப் 35 விமானங்கள் இத்தீவில் தரையிறக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அசோரஸில் உள்ள டெர்செய்ரா தீவில் அமைந்துள்ள லாஜஸ் சர்வதேச விமான நிலையத்தில் இவ்விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டன, அதன் பிறகு அவை பறக்கவில்லை.

டெக்சாஸின் ஃபோர்ட் வொர்த்தில் உள்ள தொழிற்சாலையில் பொறுத்தப்பட்ட புதிய எப் -35 பி லைட்னிங் போர் விமானங்கள், அங்கிருந்து பிரிட்டனுக்குக் கொண்டு வரப்பட்டபோது இயந்திரக் கோளாறுகளை எதிர் கொண்டன.

பழுதடைந்துள்ள இந்த எப்-35 பி விமானங்கள், அமெரிக்க உற்பத்தியாளரான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் சொத்தாகவே உள்ளன.

பிரித்தானியாவுக்கு வழங்கத் திட்டமிடப்பட்ட 138 விமானங்களில், கடைசியாக வழங்கப்பட்ட 48 விமானங்களில் கோளாறுக்கு உள்ளாகியுள்ள இந்த விமானங்களும் அடங்கும். இதே தொகுதியைச் சேர்ந்த மேலும் மூன்று விமானங்கள் கடந்த மாதம் நோர்ஃபோக்கில் உள்ள ஆர்.ஏ.எப் மர்ஹாமிற்கு சென்றடைந்தன.

டெலிகிராப்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *