அமெரிக்காவின் கலிபோர்னிய, சான் டியாகோவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இத்துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படுவர்களில் ஒருவரின் தாய், ‘தனது மகன் நண்பரொருவருடன் ஓடிப்போய் விட்டதாகவும், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் இருக்கலாம் என்றும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
அவர் பொலிஸாருக்கு தகவலை வழங்கி இரண்டு மணித்தியாலயங்கள் கடந்த நிலையில் இத்துப்பாக்கி பிரயோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்பே அந்த இருவரையும் பொலிஸார் தேடி வந்த சூழலில் சான் டியாகோவின் இஸ்லாமிய மையத்தில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. என்றாலும் இஸ்லாமிய மையக் கட்டிடத்தின் முன்புறத்திற்கு வெளியே துப்பாக்கிக் காயங்களுடன் மூன்று பேரை பொலிஸார் கண்டறிந்தனர்.
மசூதியிலிருந்து சில தெருக்களுக்கு அப்பால் வாகனமொன்றில், 17 மற்றும் 18 வயதுடைய அந்த சந்தேக நபர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்ட காயங்களுடன் இறந்து கிடந்ததையும் பொலிஸார் கண்டறிந்தனர்
பி.பி.சி



