தனது மொரேனா கட்சிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கும் இடையில் எந்தத் தொடர்பும் கிடையாது என்று மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெயின்பாம் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோவின் சினலோவா மாகாணத்தில் மொரேனா கட்சியைச் சேர்ந்த இரண்டு முன்னாள் உயர் அதிகாரிகள், சினலோவா போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளனர். அதனையடுத்து, மெக்சிகோ ஜனாதிபதி மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது. இந்நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். மாநிலத்தின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜெரார்டோ மெரிடா சான்செஸ் கடந்த வாரம் அரிசோனாவுக்குள் எல்லையைக் கடந்தபோது, அமெரிக்க மார்ஷல்களால் கைது செய்யப்பட்டதாக மெக்சிகோவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு சினலோவாவின் முன்னாள் நிதி அமைச்சர் என்ரிக் தியாஸ் வேகா, நிவ்யோர்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.சக்திவாய்ந்த சினலோவா போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஆளுநர் ரூபன் ரோச்சா மோயா உட்பட 10 சினலோவா அதிகாரிகள் மீது கடந்த மாதம் மெரிடா மற்றும் தியாஸ் இருவரும் குற்றம் சாட்டப்பட்டனர். அமெரிக்காவிற்குள் பெருமளவில் சட்டவிரோத போதைப்பொருட்களை இறக்குமதி செய்ய அவர்கள் உதவியதாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளமை தெரிந்ததே.
த டெலிகிராப்



