பெற்றோலிய ஒப்பந்தங்களில் இந்தியா- யூ.ஏ.ஈ கைச்சாத்து

1 Min Read

மூலோபாய பெற்றோலிய இருப்புக்கள் மற்றும் திரவ எரிவாயு விநியோகம் தொடர்பான ஒப்பந்தங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளன.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு கடந்த வார இறுதியில் மேற்கொண்டுருந்த விஜயத்தின் போது இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், ஒரு மூலோபாய பாதுகாப்பு கூட்டாண்மைக்கான கட்டமைப்பையும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு பாதுகாப்பு கைத்தொழில்துறை ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும், புத்தாக்கம், மேம்பட்ட தொழில்நுட்பம், பயிற்சிகள், கடல்சார் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு, பாதுகாப்பான தகவல் தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றில் ஒத்துழைப்பதற்கும் இரு தரப்பினரும் இணக்கம் கண்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கச்சா எண்ணெய் சேமிப்பை 30 மில்லியன் பீப்பாய்கள் வரை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இந்த ஒப்பந்தங்களில் அடங்கியுள்ளன என்று அபுதாபியின் அரச எண்ணெய் நிறுவனம் விடுத்திருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *