லா லிகா கிண்ணம் பார்சிலோனா வசம்

1 Min Read

தனது கடும் போட்டியாளரான ரியல் மெட்ரிட் அணியை 2–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பார்சிலோனா இந்தப் பருவத்தில் மேலும் மூன்று போட்டிகள் மிச்சமிருக்க 29 ஆவது முறையாக ஸ்பெயினின் பிரதான லீக் தொடரான லா லிகாவில் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த மைதானமான கேம்ப் நூவில் நடைபெற்ற போட்டியில் பார்சிலோனா அணி முதல் பாதியிலேயே இரண்டு கோல்களைப் பெற்ற முன்னிலை பெற்றது. மார்கஸ் ரஷ்போர்ட் மற்றும் பெரன் டொரஸ் ஆகியோர் அந்த கோல்களை பெற்றனர். ரியல் மெட்ரிட்டால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியாமல்போனது. பார்சிலோனா தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக லா லிகாவை வென்றபோதும் இந்தக் கிண்ணத்தை அதிகமுறை வென்ற அணியாக ரியல் மெட்ரிட் 36 பட்டங்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *