இலங்கைக்கு எதிராக நியூசி. ரக்பி அணி மீண்டும் வெற்றி

1 Min Read

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து 85 கிலோகிராமுக்கு உட்பட்ட ரக்பி அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணி 10–25 புள்ளிகளால் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் இரு போட்டிகளிலும் நியூசிலாந்து அணி சம்பியன் பட்டத்தை வெற்றது.

கண்டி தித்தவல மைதானத்தில் நேற்று முன்தினம் (03) நடைபெற்ற இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி ஆரம்பம் தொடக்கம் ஆதிக்கம் செலுத்தியதோடு முதல் பாதியில் அந்த அணி 13–07 என்ற புள்ளிகளால் முன்னிலை பெற்றது.

இதன்போது நியூசிலாந்து அணி 02 கோல்கள், ஒரு டிரை மற்றும் 02 பெனால்டிகள் மூலம் புள்ளிகளை பெற்ற நிலையில் இலங்கையால் ஒரு பெனால்டி கோல் மற்றும் ஒரு பெனால்டி மூலம் புள்ளிகளை பெற முடிந்தது.

இதில் கொழும்பில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 85 கிலோகிராமுக்கு உட்பட்ட ரக்பி அணி இலங்கை அணியை 27–16 என்ற புள்ளிகளால் வென்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *