ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள ஒரு உயர்தர குடியிருப்பு கட்டிடம் மீது உக்ரைன் ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலுக்கு உள்ளான குடியிருப்பு கட்டிடம், தென்மேற்கு மொஸ்கோவில் உள்ள ஒரு உயர்தரப் பகுதியில் அமைந்துள்ளது
இத்தாக்குதலில் உயிரிழப்பு ஏற்படாத போதிலும் கட்டிடத்தின் முகப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்ய தலைநகர் மீது தொடர்ந்து மூன்றாவது இரவாக ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
நாசி ஜெர்மனிக்கு எதிரான சோவியத் யூனியனின் வெற்றியைக் குறிக்கும் வகையில், மே 09 ஆம் திகதி ரஷ்யா அணிவகுப்பு நடத்த உள்ளது. அதற்கு முற்பட்ட தினங்களில் இத்தகைய தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஞாயிறு முதல் திங்கள் வரை ரஷ்யாவின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 117 ட்ரோன்கள் இடைமறிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
சென் பீட்டர்ஸ்பேர்க் பகுதியை மட்டும் குறிவைத்து 60 ட்ரோன்கள் தாக்கப்பட்டன. இது ஒரு மிகப் பெரிய தாக்குதல் என்று பிராந்திய ஆளுநர் அலெக்சாண்டர் ட்ரோட்ஜென்கோ கூறினார்.



