இந்த உலகமே கர்ம வினையின் அடிப்படையில் தான் செயல்படுகிறது. அப்படியாக, நாம் சந்திக்கின்ற இன்பம், துன்பம், வெறுப்பு கோபம் இவை எல்லாம் கர்மவினை அடிப்படையில் தான் செயல்படுகிறது.
நாம் வேண்டும் என்றாலும் வேண்டாம் என்றாலும் நமக்கு நடக்க இருக்கக்கூடிய மிகப்பெரிய ஆபத்தையும் துன்பத்தையும் நம்மால் தடுக்க முடியாது.
அதைப்போல் மிகப்பெரிய அளவில் வர கூடிய சந்தோஷங்களையும் நம்மால் வேண்டாம் என்று சொல்ல முடியாது. சமயங்களில் ஒருவர் தரக்கூடிய சாபத்தினாலும் துன்பம் வருகிறது. அதில் ஒருவர் வாங்கக்கூடாத சாபமாக தாய் தந்தையரின் சாபம் இருக்கிறது.
எவர் ஒருவர் தாய் தந்தையின் சாபத்தை பெற்று விடுகிறார்களோ கட்டாயம் அந்த சாபமானது அவர்கள் வாழ்க்கையில் ஏதோ ஒரு நிலையில் பலித்து விடும்.
ஆதலால், முடிந்தவரை உங்கள் தாய் தந்தையர் உங்களை துன்புறுத்தினாலும் கஷ்டப்படுத்தினாலும் அவர்களுக்கு நீங்கள் பிள்ளையாக செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட வேண்டும்.
மேலும், கலியுக வரதனாக போற்றக்கூடிய முருகப்பெருமான் பக்தர்களுக்கு கட்டாயமாக நொடிப்பொழுதில் வந்து துயரத்தை ஆற்றக் கூடியவராக இருக்கிறார். இந்த உலகத்தின் அதிசயம் என்றால் முருகப்பெருமான் தான்.



