உதயமானார் சனி பகவான்..பெயர் புகழ் பெறப்போகும் முக்கிய ராசிகள்!

Karan
By
Karan
1 Min Read

இந்த உலகத்தில் மனிதர்களை திருத்துவதிலும் வழிநடத்துவதிலும் ஒரு நண்பனை போல், ஒரு ஆசிரியரை போல், தாய் தந்தையர் போல் வழி நடத்துவதில் சனி பகவானை போல் எந்த கிரகமும் இல்லை. மேலும், சனி பகவானுடைய ஒவ்வொரு அசைவும் ஜோதிட ரீதியாக 12 ராசிகளுக்கு மிக முக்கிய அளவில் தாக்கத்தை உண்டு செய்யும்.

மேலும் கடந்த சில காலமாக சனி பகவான் அஸ்தமன நிலையில் இருக்கிறார். ஆனால், ஏப்ரல் 22 ஆம் தேதி அதிகாலை 4:49 மணிக்கு அவர் மீண்டும் உதயமானார். இந்த காலகட்டத்தில் சனிபகவானுடைய ஆற்றல் மிக வேகமாக செயல்படும். அப்படியாக சனிபகவானுடைய இந்த தாக்கம் எந்த ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் நன்மைகளை கொடுக்கப் போகிறது என்று பார்ப்போம்.

உதயமானார் சனி பகவான்..பெயர் புகழ் பெறப்போகும் முக்கிய ராசிகள் | 2026 April 22 Sani Uthayam Bring Luck To 3 Zodiac

ரிஷபம்:

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இந்த உதயம் ஒரு வரப்பிரசாதமாகவே அமையப்போகிறது. நீண்ட நாட்கள் நிறைவேறாமல் இருந்த விருப்பங்கள் இவர்களுக்கு இந்த காலகட்டங்களில் நிறைவேறும்.

உங்களை புரிந்து கொள்ளவே இல்லை என்று நீங்கள் வருந்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் கட்டாயமாக குடும்பத்தினர் உங்களை புரிந்து செயல்படக்கூடிய அமைப்பு உண்டாக்கும். வேலையில் அடுத்தடுத்து முன்னேற்றத்தை பெறப்போகிறீர்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் இந்த உதயத்தின் தாக்கத்தால் தொழில் மற்றும் பொருளாதார ரீதியாக நல்ல வளர்ச்சியை அடையப் போகிறார்கள். அலுவலகத்தில் நீங்கள் மேற்கொள்ள கூடிய கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் மற்றும் சமுதாயத்தில் இழந்த மதிப்பையும் செல்வாக்கையும் மீண்டும் பெறக்கூடிய காலகட்டமாகும். மனதில் அதீத உற்சாகமும் தன்னம்பிக்கையும் கிடைக்கும்.

துலாம்:

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் இவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்ப்பாராத மாற்றங்களையும் திருப்புமுனையும் கொடுக்கப்போகிறது. மனதில் நேர்மறையான சிந்தனைகள் அதிகரிக்கும். அலுவலகத்திலும் தொழில் வாய்ப்புகளும் நீங்கள் சரியான முடிவு எடுத்து முன்னேறிச் செல்வீர்கள். உங்களுடைய வேலையில் உங்களுக்கு திருப்தி இல்லாமை இருக்கிறது என்றால் உங்கள் வேலையை மாற்றிக் கொள்ள சரியான காலகட்டமாகும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *