சித்ரா பௌர்ணமியுடன் தொடர்பு கொண்ட 16 ரகசியங்கள்.. என்ன தெரியுமா?

Karan
By
Karan
4 Min Read

பௌர்ணமி தினங்களில் சித்ரா பௌர்ணமி என்பது மிகவும் விசேஷமான நாளாக இருக்கிறது. சித்ரா பௌர்ணமி என்பது முன்னோர்கள் ஆசீர்வாதம் பெறவும், நம்முடைய கர்ம வினை நீங்கவும் பாவ நிவர்த்தி அடைவதற்கு என பல விஷயங்களுடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது.

அதனால் இந்த நாளில் நாம் செய்யும் பரிகாரங்களுக்கு மிகப்பெரிய அளவில் சக்தி கிடைக்கிறது. அது மட்டுமில்லாமல் நம் வாழ்க்கையில் ஏற்பட்ட தடை, தடைகள் பொருளாதாரத்தில் கஷ்டம் எல்லாம் விலகி மன அமைதி கிடைக்கும் என்பது நம்பிக்கை. அப்படியாக சித்ரா பௌர்ணமியில் மறைக்கப்பட்ட 16 சூட்சம பரிகாரங்களை பற்றி பார்ப்போம்.

சித்ரா பௌர்ணமியுடன் தொடர்பு கொண்ட 16 ரகசியங்கள்.. என்ன தெரியுமா? | 16 Important Scerets Of Chithra Pournami Worship

1.சித்திரகுப்தர் வழிபாடு:

சித்ரா பௌர்ணமி அன்று காலையில் வெள்ளை மலர், வெல்லப்பொங்கல் வைத்து வழிபாடு செய்து நம்முடைய தவறுகளை உணர்ந்து அதற்குரிய மன்னிப்பை கேட்க வேண்டும்.

கட்டாயமாக மனிதர்கள் காலத்தினால் செய்வதறியாது பிழை செய்தாலும் காலம் கடந்து நிச்சியம் அவர்கள் செய்தது தவறு என்று உணர்த்தக்கூடிய பிரபஞ்சத்தில் தான் நாம் வாழ்கின்றோம். அவ்வாறு நீங்கள் உணர்ந்து விட்டீர்கள் என்றால் நிச்சயமாக மன்னிப்பை மனதார கேட்கும் பொழுது பாவங்களில் விடுபடலாம்.

2. நீர்தர்ப்பணம்:

ஆற்றங்கரை அல்லது வீடுகளில் சுத்தமான நீரில் கருப்பு எள் சேர்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும். முன்னோர்களின் பெயரிலும் அவர்களை மனதில் நினைத்தும் நாம் செய்வது அவசியமாகும்.

3. அன்னதானம்:

அன்றைய தினம் நாம் குறைந்தபட்சம் மூன்று நபருக்காவது அன்னதானம் வழங்கும்பொழுது நிச்சயம் நம்முடைய முன்னோர்கள் மன மகிழ்ந்து நமக்கு ஆசிர்வாதத்தை கொடுப்பார்கள்.

4. பால் அபிஷேகம் சந்திரனுக்கு:

சித்ரா பௌர்ணமி அன்று இரவு நேரத்தில் பால் அல்லது தண்ணீர் சமர்ப்பித்து வழிபாடு செய்தால் மனதெளிவு, மன அமைதி, மன அழுத்தம் குறையும்.

5. நீதியுடன் ஒரு உறுதி எடுக்கவும்:

மனிதர்களுக்கு எப்பொழுதும் தவறுகளை திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும். அப்படியாக, சித்ரா பௌர்ணமி அன்று நீங்கள் இத்தனை நாட்கள் எவ்வளவு பெரிய தவறுகள் செய்திருந்தாலும் அன்றைய நாள் இனிமேல் நான் தவறு செய்யமாட்டேன் என்று உறுதி எடுக்கும் பொழுது நிச்சயம் உங்களுக்கு வாழ்க்கையில் நல் வழி பிறக்கும்.

6. வெள்ளை ஆடை அணிதல்:

அன்றைய நாள் முழுதும் நாம் வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்தால் நம்முடைய மனம் சுத்தமடையும். அதோடு மன தெளிவு கிடைக்கும்.

7. சந்திர காயத்ரி ஜபம்:

சித்ரா பௌர்ணமி அன்று சந்திர காயத்ரி மந்திரத்தை “ஓம் க்ஷீரபுத்ராய வித்மஹே…” நாம் ஜபம் செய்யும் பொழுது நமக்கு மன உறுதியும் அதிர்ஷ்டமும் தேடி வருகிறது.

8. ஒரு மரம் நட்டு வைக்கவும்:

சித்ரா பௌர்ணமி அன்று ஆலமரம் அல்லது வேம்பு நட்டு வைத்தால் நமக்கு பித்ருவின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும்.

சித்ரா பௌர்ணமியுடன் தொடர்பு கொண்ட 16 ரகசியங்கள்.. என்ன தெரியுமா? | 16 Important Scerets Of Chithra Pournami Worship

9. பழைய தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கவும்:

சில நேரங்களில் நாம் செய்த தவறுகளுக்கு நேரடியாக சென்று அந்த நபரிடம் மன்னிப்பு கேட்பதற்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை. ஆதலால் நாளை சித்ரா பௌர்ணமி அன்று மனதார யாரிடம் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவர்களை நினைத்து மன்னிப்பு கேட்டால் நிச்சயம் உங்களுக்கு வாழ்க்கையில் திருப்பு முனை அமையும்.

10. பழைய கடன்களை நினைத்து தீர்க்க முயற்சி:

நீங்கள் யாரிடமாவது கடன் வாங்கி இருந்தால் அன்றைய நாள் அந்த கடனை திருப்பி செலுத்தும் பொழுது பொருளாதார தடைகள் விலகும்.

11. வெள்ளை பசு அல்லது நாய் உணவூட்டல்:

சித்ரா பௌர்ணமி அன்று விலங்குகளுக்கு உணவு கொடுப்பது என்பது மிகப்பெரிய அளவில் புண்ணியத்தை சேர்க்கும். குறிப்பாக பசுவிற்கு உணவு வழங்கும்பொழுது லட்சுமியின் அருள் கிடைக்கிறது. நாய்களுக்கு உணவு வழங்கும் பொழுது காலபைரவரின் முழு அருளையும் நாம் பெறலாம்.

12. தண்ணீர் பானை வைத்து சேவை:

சித்ரா பௌர்ணமி வருகின்ற மாதம் வெயில் காலம் என்பதால் தண்ணீர் தானம் செய்யலாம். இதனால் பெரும் புண்ணியம் நமக்கு சேர்கிறது.

13. சந்திர தரிசனம் தவறாமல் செய்யவும்:

சித்ரா பௌர்ணமி அன்று கட்டாயம் நாம் நிலவை தரிசனம் செய்வது அவசியம். அதாவது இரவு ஏழு முதல் ஒன்பது மணிக்குள் சந்திர தரிசனம் செய்தால் மனதில் அமைதியும் குடும்ப ஒற்றுமையும் கிடைக்கும்.

15. புத்தகம் அல்லது கல்வி உதவி:

ஏழை மாணவர்களுக்கு புத்தகம் வாங்கி கொடுக்கும் பொழுது நம்முடைய கர்ம வினைகள் ஆனது குறைகிறது.

16. ஒரு நாள் முழு சுயபரிசோதனை:

சித்ரா பௌர்ணமி அன்று நீங்கள் தியானம் செய்து நீங்கள் இத்தனை நாள் செய்த தவறுகளின் நினைத்து உங்களை நீங்கள் பரிசீலனை செய்து கொள்ளலாம். இதனால் சித்ரகுப்தர் பாவ கணக்குகளில் நம்முடைய பாவங்கள் குறைந்து நமக்கு ஆசிர்வாதம் வழங்கப்படும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *