அவுஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா இலங்கை முஸ்லிம் சமூக அமைப்பு ஏற்பாடு செய்த கிரிக்கெட் போட்டியில் மெல்பர்ஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
கல்வின் பார்க் ரிசர்வ் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் மொத்தம் பத்து அணிகள் பங்கேற்றன. இதன் இறுதிப் போட்டியில் சோரிஹ் சிக்சஸ் அணியை எதிர்கொண்ட இனாசிர் வஸீர் தலைமையிலான மெல்பர்ஸ் ஸ்ட்ரைக்கர்ஸ் அணி வெற்றியீட்டியது. அதிக ஓட்டங்கள் பெற்ற வஸீர் மற்றும் லரீப் கலீல், அதிக விக்கெட் வீழ்த்திய ஃபைசல் ரூஹல் அதற்கான விருதுகளை வென்றனர்.



