4,500 மெகாவார்ட்டை எட்டியுள்ள பாகிஸ்தான் மின் பற்றாக்குறை

1 Min Read

மத்திய கிழக்கு போரின் விளைவாக நாட்டின் மின் பற்றாக்குறை 4,500 மெகாவாட்டை எட்டியுள்ளதாக பாகிஸ்தான் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

திரவ இயற்கை எரிவாயு பற்றாக்குறை தீவிரமடைந்துள்ளதால் பரவலான மின்வெட்டை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் பாகிஸ்தான் சந்தித்த மிகக் கடுமையான எரிசக்தி நெருக்கடிகளில் இதுவும் ஒன்றாகும். இப்போர் காரணமாக திரவ இயற்கை எரிவாயு விநியோகம் தடைபட்டுள்ளதுடன், மின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் கிடைப்பதும் குறைந்துள்ளது. இதனால் சில பகுதிகளில் மாலை நேரங்களில் சுமார் 2.25 மணி நேரம் மின்வெட்டு முன்னெடுக்கப்படுகிறது.

பாகிஸ்தான் தனது மின்சாரத் துறைக்கு பயன்படுத்தும் திரவ இயற்கை எரிவாயுவை முழுமையாக கட்டாரிலிருந்து இறக்குமதி செய்கிறது. தற்போதைய சூழலில் உடனடி சந்தையிலிருந்து கொள்முதல் செய்வது குறித்தும் பரிசீலித்து வருகிறது. இந்நிலையில் மின்சாரப் பிரிவின் பேச்சாளர் ஒருவர், ‘நுகர்வோர் மின்சாரத்தைச் சேமிக்குமாறும், குறிப்பாக இரவு நேரங்களில் ஆற்றல் சேமிப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும் வலியுறுத்தினார். டவுன் நியூஸ்

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *