நீங்க ரிஷப ராசியில் பிறந்தவரா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்!

Karan
By
Karan
2 Min Read

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, பொருளாதாரம், விசேட ஆளுமைகள் உட்பட அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாகவே தாக்கம் செலுத்தும் என குறிப்பிடப்படுகின்றது.

அந்த வகையில், ரிஷப ராசி மற்றும் ரிஷப லக்கிணத்தில் பிறந்த பெண்களிடம் இருக்கும் தனித்துவமான குணங்கள் தொடர்பில் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Story Pin image

ரிஷப பெண்களின் தனித்துவம்

காதல், அழகு மற்றும் ஆடம்பரத்தின் கிரகமாக அறியப்படும் சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்த ரிஷப ராசி பெண்கள் இயல்பாகவே மற்றவர்களை நொடியில் வசீகரிக்கும் முக அழகும் காந்தம் போல் ஈர்க்கும் பார்வையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.

நேர்மையான குணத்துக்கும் விசுவாசத்துக்கு பெயர் பெற்றவர்களாக திகழும் இந்த ராசி பெண்கள் இவர்களின் ராசி சின்னம் போல் மாடாய் உழைக்கும் கடின உழைப்பாளிகளாக இருப்பார்கள்.

நீங்க ரிஷப ராசியில் பிறந்தவரா? அப்போ இந்த குணங்கள் நிச்சயம் இருக்கும்! | Rishaba Rasi Special Attitude And Hobbits

இந்த ராசி பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்வதிலும் உடலை வாசனையைாக வைத்துக் கொள்வதிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.

மற்ற ராசி பெண்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் எந்த உடையை அணிந்தாலும் அழகாக தோற்றமளிப்பார்கள். இவர்களிடம் மற்றவர்களை ஈர்க்கும் ஒரு வசீகர ஆற்றல் இயல்பாகவே இருக்கும்.

மேலும் இந்த ராசி பெண்கள் நிதி முகாமைத்துவத்திலும் சிறந்தவர்களாக அறியப்படுகின்றாரை்கள். கையில் இருக்கும் பணத்தை எப்படி பெருக்கலாம் என்ற கலையை இவர்களிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

இந்த ராசி பெண்கள் சரியான நேரத்தில் சரியான துறையில் பணத்தை முதலீடு செய்து செய்து செல்வத்தை பெருக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

காதல் விடயத்தில் மிகவும் நேர்மையாகவும் விசுவாசமாகவும் நடந்ர்துக்கொள்ளும் குணம் கொண்ட இவர்கள் அன்புக்கா எதையும் செய்யும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

இந்த ராசி பெண்கள் கணவனுக்கு சிறந்த மனைவியான மாத்திரமன்றி ஒரு தாயாகவும், சகோதரியாகவும், மகளாகவும் கூட தனது கடமைகளையும் பொறுப்புக்களையும் சரியாக நிறைவேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே.(மறத்தமிழர் முரசம்  இதற்கு பொறுப்பேற்காது). 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *