ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளுக்கு விமானப்படையின் 17 வீரர்கள் – 6ஆவது போட்டித் தொடர் சீனாவில்

1 Min Read

ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபெறவுள்ள விளையாட்டு குழுவில் இலங்கை விமானப்படையை சேர்ந்த 17 விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

சீனாவில் நடைபெறவுள்ள 6ஆவது போட்டிகள் எதிர்வரும் ஏப்ரல் 22 – 30 வரை இடம்பெறவுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் விமானப்படை அணியினர், தடகளம், கைப்பந்து, கரப்பந்து, மல்யுத்தம், கபடி ஆகிய விளையாட்டுப் பிரிவுகளில் பங்கேற்கவுள்ளனர்.

போட்டியில் பங்குபெறுவதற்கு முன்னர் பங்கேற்கும் விமானப்படை வீர வீராங்கனைகள் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடன் குழுப் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதன்போது விளையாட்டு வீரர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த விமானப்படைத் தளபதி, சர்வதேச அரங்கில் இலங்கைக்குப் பெருமை சேர்க்க பாடுபடுமாறு அவர்களை ஊக்குவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *